நாளை மின்துண்டிப்பு இல்லை
நாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நாடளாவிய ரீதியில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.