10 மணி நேரம் மின்வெட்டு? : எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்த கருத்து பொய்யானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், டிசம்பர் 24, 25, 26, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.