பணிப்புறக்கணிப்பில் அஞ்சல் ஊழியர்கள்

அஞ்சல் ஊழியர்கள் நேற்று புதன் கிழமை நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

ஊழியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இடையூறுகள் காணப்படுவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார, ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் திறைசேரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்