பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த படத்தில் இருக்கும் நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8594917, 071-8591758, 011-2422176, அல்லது 011-2391529 என்ற எண்களில் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.