
கைது செய்ய சென்ற போது தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்
ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்ய சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு, மெடபிட்டிபான பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஒழிப்புச் சுற்றிவளைப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த போது கிடைத்த தகவலின் பிரகாரம், சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்யச் சென்ற போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
