இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிய தோட்ட தொழிலாளர்கள்
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பகுதியில் உள்ள ஆர்.பி.கே பிளான்டேசனுக்கு உரித்தான மவுசாக்கலை தோட்ட சீர்பாதம் பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளர்கள், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிவாரண நிதிக்கு, ரூபாய் 100,000 க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கினர்.
கடந்த 12 ஆம் திகதி, மஸ்கெலியா-மவுஸ்சாகலை தோட்ட சீர்பாதம் பிரிவில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சீட்டன் பிரிவு, லக்கம் பிரிவில் பணி புரிந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள், தமது அன்றாட வேதனத்தில் இருந்து ரூபாய் 135,000 அரசாங்கத்தின் பேரிடர் நிதிக்கு நன்கொடையாக வழங்கினர்.
மேலும், இந்த சந்தர்ப்பத்தில் போராட்டமின்றி தோட்ட மக்கள் வென்ற ஊதியம் மற்றும் உரிமைகளை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு நன்றி செலுத்தப்பட்டது
இந்த நிகழ்விற்காக, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் துணைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், தோட்ட மக்கள் ஒன்று கூடி, தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.




