சட்டமா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான, சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), சட்டமா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள சிவனேசத்துரை சந்திரகாந்தன், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு தடயவியல் மருத்துவர் முன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான பேராசிரியர் ரவீந்திரநாத் சுப்பிரமணியத்தைக் கடத்தி காணாமல் போகச் செய்த குற்றச்சாட்டின் பேரில், பிள்ளையான் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகவும் பிள்ளையானிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது,