புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் , நெல்லியடி பகுதியிலுள்ள புடவைக்கடை ஒன்றின் மீது நேற்று செவ்வாய் கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் புடவைக்கடைக்கு பின்புறமாக வந்து பெற்றோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கடை ஊழியர்களும் அப்பகுதியில் நின்றவர்களும் இத்தாக்குதலை மேற்கொண்டவர்களை துரத்திச்சென்றபோதிலும், அவர்கள் தப்பியோடியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சம்பவ தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்