
திருகோணமலையிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியும் மக்கள்!
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோலை பெறுவதற்காக இன்று சனிக்கிழமை மாலை முந்தியடித்துக் கொண்ட நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனை தொடர்ந்து கிண்ணியா, மூதூர், புல்மோட்டை உள்ளிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
இதனால் இரவு நேரமாகியும் மிக நீண்ட வரிசை காணப்படுகிறது.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவும் எனும் அச்சத்தில் தற்போது எரிபொருளை பெற மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் முந்தியடிக்கின்றனர்.
