
பளை மத்திய கல்லூரியின் சேவை நலன் பாராட்டு விழாவும் ‘உதயம் நூல்’ வெளியீட்டு விழாவும்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்ட பளை மத்திய கல்லூரியின் மாண்புறு சேவையாளன் அதிபர் கணபதிபிள்ளை உதயகுமாரனுக்கு (SLPS-1SLPS-1) நேற்று புதன்கிழமை பாடசாலை வளாகத்தில் சேவை நலன் பாராட்டு விழா வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
பளை மத்திய கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற அதிபர் க.உதயகுமாரனுக்கு சேவைநலன் பாராட்டு விழாவும் ‘உதயம் நூல் கல்லூரி வளாகத்தில் தலைவர் க.ருகுணன் (பிரதிஅதிபர்) தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில், பாடசாலை ஆசிரியர், நலன்புரிச்சங்கம் மற்றும் பெற்றோர்கள், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாணக்கல்விப்பணிப்பாளர், பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், வலயக்கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப்பணிப்பாளர், அதிபர்கள் என கல்விப்புலம் சார்ந்த பலரும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்கியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.