சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பம்
சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி, நாட்டரிசி நெல் 1 கிலோகிராம் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 1 கிலோகிராம் 125 ரூபாவிற்கும், கீரிசம்பா நெல் 1 கிலோகிராம் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்காக கடந்த பாதீட்டில் 06 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அம்பாறை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நெல் அறுவடை ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக குறித்த மாவட்டங்களுக்கான நெற்கொள்வனவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.