பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் திட்டமிட்ட குழுக்கள்

கொழும்பு பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு, தம்மை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்தி, பல்வேறு நிகழ்வுகளுக்காக உணவுப் பொருட்கள் மற்றும் பணம் தேவைப்படுகின்றதாகக் கூறி நிறுவனங்களை ஏமாற்றும் திட்டமிட்ட குழுக்கள் செயற்பட்டு வருகின்றது

இது தொடர்பாக ஆரம்ப விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய நபர்கள் அல்லது திட்டமிடப்பட்ட குழுக்களால் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகளுக்கு ஏமாறாமல் இருக்குமாறு அனைத்து நிறுவனங்களும் பொதுமக்களும் எச்சரிக்கப்படுகின்றனர்.

மேலும், இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தாலோ அல்லது சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து ஏதேனும் தகவல்கள் இருந்தாலோ, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்திற்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சிரேஷ்டப் பொலிஸ் அத்தியட்சகர் மத்திய கொழும்பு – 071-8591551