இணையக் கடன் வழங்கும் நிலையம் சுற்றிவளைப்பு : 5சீனப் பிரஜைகள் உட்பட ஆறுவர் கைது

தெஹிவளையில் உள்ள இணையக் கடன் வழங்கும் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து சீனப் பிரஜைகளையும் ஒரு இலங்கையர் ஒருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர்.

குற்றத்தடுப்பு பிரிவின் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக, குறித்த நிறுவனத்தில் இருந்து எட்டு கணினிகள், பதின்மூன்று மடிக்கணினிகள் மற்றும் 41 கையடக்க தொலைபேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.