யாழ்.பண்ணையில் கத்தி வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – பண்ணை பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபர், சிறையில் இருப்பவருக்கு உணவு கொடுத்துவிட்டு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது முன்பகை காரணமாக அவர்மீது, தாக்குதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.