திருகோணமலை-சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – சீனக்குடா பகுதியில், ரயில் கடவைக்கு அருகாமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த மர்சூத் முகமட் சப்ரின் (வயது 40) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதியதில், இவ்விபத்து பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவரின் ஜனாஸா திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேல் அதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.