அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயம்!

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், இன்று ஞாயிற்றுக்கிழமை அபுதாபியின் சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஒரு ‘சம்பவத்தில்’, ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழு பேர் காயமடைந்தனர், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சயீத் சர்வதேச விமான நிலையத்தில், ஒரு ஆசிய நாட்டவர் உயிரிழந்ததாகவும், ஏழு பேர் காயமடைந்ததாகவும், அபுதாபி விமான நிலைய தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன, என்று விமான நிலையத்தின் X பக்கத்தில் அறிக்கை ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.