குழு மோதலில் ஒருவர் பலி இருவர் காயம்
குருநாகல், மாவத்தகம, பிலஸ்ஸ பிரதேசத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிசார் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 28 வயதுடைய பிலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன், மோதலின் போது ஏற்பட்ட பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மோதலில் காயமடைந்த மேலும் இருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த நபருக்கும் அப்பகுதியில் உள்ள மற்றொரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே மோதலில் முடிந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
