யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் மரணம்

யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது – 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, புடையன் பாம்பு தீண்டியுள்ளது.அதனை அடுத்து யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று செவ்வாய் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்