வாகரை பிரதேச சிறுவர் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம்

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாமல் லியனகே (Namal Liyanage), குழந்தைகள் பாதுகாப்புத் தலைவர், யுனிசெஃப் ஆண்ட்ரூ ஆலோசகர் மிராண்டா ஆம்ஸ்ட்ராங் (Miranda Amstrong – chief of child protection, Andrew- consultant UNICEF) ஆகியோர் வாகரை பிரதேசத்திற்கு வருகை தந்தருந்தனர்.

பிரதேச செயலாளர் எந்திரி. க. அருணன் தலைமையில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஐ் ஒருங்கிணைப்பில் பிரதேச சிறுவர் சபை சிறார்களால் வரவேற்கப்பட்டார்கள்.

இவ் விஐயத்தின் போது ஏற்கனவே யுனிசெஃப் அனுசரணையுடன் PPC நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 30 நலிவுற்ற குடும்பங்களுக்கு 40000/= ரூபாய் பெறுமதியான உலர் உணவு, கற்றல் உபகரணங்கள் மற்றும் 07 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதை பார்வையிட்டதுடன், அதன் முன்னேற்றத்தினையும் களவிஐயம் ஊடாக பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

சிறுவர் பெண்கள் பிரிவு ஊடாக வாகரை பிரதேச சிறுவர் பாதுகாப்பு செயற்பாடுகள் , எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்கள் என்பன தெளிவுபடுத்தப்பட்டது .

இந்நிகழ்வில் சிறுவர் நன்னடத்தை பொறுப்பாளர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்பிள்ளைபருவ, அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவளதுனை உத்தியோகத்தர், சிறுவர்சபை சிறார்கள், என பலரும் கலந்து கொண்டனர் .