அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற நுவரெலியா மாணவிக்கு மடிக்கணனி வழங்கி வைப்பு
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பொறியியல் தொழில்நுட்பம் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற நுவரெலியா மாவட்டம், அம்பகமுவ கல்வி வலயத்துக்குட்பட்ட கினிகத்தேன மத்திய கல்லூரி மாணவியான செஹானி நவோதயாவிற்கு மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை சிஎல்எப் வளாகத்திலுள்ள தனது அலுவலகத்துக்கு மாணவியை வரவழைத்து வாழ்த்துக்களை தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், எதிர்காலத்தில் கல்வியிலும், தொழில்நுட்ப பிரிவிலும் சாதனைகளை நிலைநாட்ட தனது ஒத்துழைப்பையும் வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
இதன்போது ஜனாதிபதிக்கு ஜீவன் தொண்டமான் அழைப்பை ஏற்படுத்திய நிலையில் குறித்த மாணவிக்கு தொலைபேசி ஊடாக ஜனாதிபதியும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இ.தொ.கா பிரதி தலைவர் கணபதி கணகராஜ், பாடசாலை அதிபர் உப்புல், மாணவியின் பெற்றோர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
