நுவரெலியா மரக்கறிகளின் விலையில் மாற்றம்

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக கொள்வனவு மற்றும் விற்பனை செய்யப்படும் கிலோவுக்கான மரக்கறி விலைகளின் இன்றைய நாளுக்குரிய விலை பட்டியலை இந்த நிலையத்தின் காரியாலயம் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற முட்டை கோஸ் 70-90 ரூபாவாகவும் கரட் 125-145 ரூபாவாகவும் லீக்ஸ் 270-290 ரூபாவாகவும் ராபு 80-100 ரூபாவாகவும் இலையுடன் பீட்ரூட் 220-240 ரூபாவாகவும் இலையில்லா பீட்ரூட் 320-340 ரூபாவாகவும் உருளை கிழங்கு 290-310 ரூபாவாகவும் உருளை கிழங்கு சிவப்பு 270-290 ரூபாவாகவும் நோக்கோல் 100-120 ரூபாவாகவும் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் உயர்தர சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலை கிலோ ஒன்றின் விலை 1800-1900 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.

அதேபோல ஐஸ்பேர்க் 1400 -1500 ரூபாவாகவும் சலட் இலை 1100-1200 ரூபாவாகவும் ப்ரோக்கோலி 1000-1100 ரூபாவாகவும், கோலிபிளவர் 1000-1100 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்