மட்டக்களப்பில் இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் Novice championship 2023 போட்டிகள் அறிவிப்பு

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் Novice championship 2023 போட்டிகளின் மட்டக்களப்பு மாவட்ட போட்டிகள் எதிர்வரும் 14,15ம் திகதி நடைபெறவுள்ளது.

நேரம்:- ஜனவரி 14 காலை 9 மணி
ஜனவரி 15 காலை 11.30 மணி

இடம்:- மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி

பரிசுகள்

சாம்பியன் – வெற்றிக்கிண்ணம்+ பதக்கம்
2nd & 3rd- பதக்கங்கள்

இரண்டாம் கட்டமான மேஜர்ஸ் போட்டிகளுக்கு (Rated event) தெரிவுசெய்யப்படும் வீரர்கள் அனைவருக்கும் சதுரங்க சம்மேளனத்தின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலதிகமாக வயதுப்பிரிவுகளில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு மாவட்ட ஏற்பாட்டாளர்களினால் வெற்றிக்கிண்ணம் (1st)பதக்கங்கள்(2nd,3rd) மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

வயதுப்பிரிவுகள் Under 10,12,14 (ஆண் பெண் தனியாக)

குறிப்பு:- போட்டிகள் வயதுப்பிரிகள் அற்ற திறந்த போட்டிகளாக ஆண், பெண்கள் தனியாக நடைபெறும்.(வயதுகள் அடிப்படையில் போட்டி நடைபெறாது). திறந்த பிரிவுப் புள்ளிகளின் அடிப்படையில் வயதுப்பிரிவின் பரிசுகள் வழங்கப்படும்.

போட்டியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசுகளை அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

*மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் மாத்திரம் பங்குபற்றலாம்.

மேலதிக தகவல்கள் தேவைப்படின் 0758815533 ஐ தொடர்புகொள்ளவும்