வெப்பநிலை கடுமையாக உயர்வடையக்கூடிய பகுதிகள் குறித்து அறிவிப்பு

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் வெப்பநிலையானது அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்