
சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் : இலங்கை மீனவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்!
கடற்பரப்பில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றமையினால் எல்லை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் பெரும் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அந்த பதற்றமான நிலைமையின் காரணமாக பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
அவ்வாறு சம்பவங்கள் இடம்பெறுகின்ற பொழுது உண்மையிலே எம்முடைய கடற்றொழிலாளர்களே பாதிக்கப்படுவர்.அவ்வாறான பாதிப்பு ஏற்படுவது பொருத்தமற்ற விடயமாகும்.
நாங்களாக இருப்போமாக இருந்தால் அல்லது எங்களுடைய மீனவர்களாக இருப்பார்களானால் அது உண்மையிலே பாதிகமான விளைவுகளை தோற்றுவிக்கும் விடயமாகும்.
ஆகவே இந்த பிரச்சினை சற்று தணியும் வரை எம்முடைய கடல் எல்லைகளுக்கு அப்பால் சென்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழிலார்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
