Northern Warriors அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ்

 

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படும் சமிந்த வாஸ் , எதிர்வரும் அபுதாபி T10 தொடரின் ஒன்பதாவது தொடரில் Northern Warriors அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Northern Warriors அணி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சமிந்த வாஸ் ஏற்கனவே பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளில் 355 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.