மின்துண்டிப்பு இல்லை

இன்று திங்கட்கிழமை ,  நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும்  மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

நீர்த்தேக்கங்களில் இருந்து, மின்சார உற்பத்திக்கு போதியளவு நீரை வெளியேற்ற நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளது.

நீரேந்து பகுதிகளில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதால், நீரை விடுவிக்க, குறித்த செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.