
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாளை வியாழக்கிழமை சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாத்திலக்க இதனை இன்று ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது கையொப்பமிட்டு வருகின்றனர்.
குறித்த பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகக் கயந்த கருணாத்திலக்க தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் அதிருப்தியின் வெளிப்பாடாக இந்தப் பிரேரணை பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது இந்தப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது குறித்து சபாநாயகரின் அறிவிப்புக்குப் பின்னரே உறுதியாகும்.
