நிந்தவூர் விபத்தில் ஒருவர் பலி
நிந்தவூர் பகுதியில் மாட்டுப்பளை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் மாட்டு வண்டியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் உருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் நிந்தவூர் சாய்ந்தமருது வேப்பையடி பகுதியைச் சேர்ந்த ஜமால்டின் ஹாரூன் ( வயது-35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் கடும் வேகம் காரணமாக மரணம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
