
விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள Ninoy Aquino சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக 360க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த மின் தடை காரணமாக தகவல் தொடர்பு மற்றும் ரேடார் கருவிகளும் செயலிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், 56,000க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
எனினும், நேற்று பிற்பகலில் அதிகாரிகள் விமான நிலைய செயல்பாடுகளை மீட்டெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.