Update – நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 1300 ஐ தாண்டியது

 

துருக்கியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 1300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் 912 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5300 பேர் காயமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.

அத்துடன்  சிரியாவின் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் குறைந்தது 467 பேர் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதியில் ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

Read more : தெற்கு துருக்கியில் நிலநடுக்கம்

Read more : நிலநடுக்கம் : பலியானோர் எண்ணிக்கை 600 ஐ தாண்டியது