
சகோதரிகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் உள்ள வீடொன்றில் இரண்டு பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சடலங்கள் நேற்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
சகோதரிகளான வயதான பெண்கள் இருவரும் மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
ஊர்காவற்துறை – செயின்ட் மேரி பகுதியில் வசிக்கும் 72 மற்றும் 74 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இறந்த பெண்களில் ஒருவர் திருமணமானவர், அவரது கணவர் மற்றும் மகனும் சில காலத்திற்கு முன்பு இறந்துவிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
