அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முகநூலில் பதிவுகளை பதிவேற்றியவர் கைது

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முகநூலில் பதிவுகளை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதுடைய குறித்த சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை பொலிஸ் ஸைபர் க்ரைம் (Cyber Crimes) பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.