
சொக்லேட் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொக்லேட் விற்பனை செய்யப்படும் இடங்களில் சோதனை நடத்தவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்படும் சொக்லேட்கள் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
