-பதுளை நிருபர்-
ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இருவர் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதுளை – லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுணுகலை கிவுலேகம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக கை துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது
அத்தோடு கிவுலேகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் லுணுகலை பல்லேபங்குவ பகுதியை சேர்ந்த 38 வயதுடைய மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு சந்தேகநபர்களிடமும் லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சந்தேகநபர்களை பசறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.