
விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
முகமாலை வீதியில் கடந்த முதலாம் திகதி புதன்கிழமை பிற்பகல் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்த பெண் நேற்று புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர் ஆவார்.
அவர் கொடிகாம் ஐயன் கோவிலடியை சேர்ந்த உதயகுமாரன் சுகந்தி (46 வயது) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயாவர்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் வீதியானது பொருமல் நிலையில் பம்மிங் போன்று காணப்படுகிறது. இதனால் தினம் தினம் குறித்த பம்மிங்கில் விபத்து இடம் பெற்றுவருவதாகவும், இதனை சீர் செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

