சட்டவிரோதமாக மரை இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி எடுத்து வந்தவர்கள் கைது
-யாழ் நிருபர்-
சட்டவிரோதமாக மரை இறைச்சியை எடுத்து வந்தவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 3 கிலோ மரை இறைச்சியை கிளிநொச்சியில் இருந்து எடுத்து வந்தவேளை ஊர்காவற்துறை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். அவரை இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, அனலைத்தீவு பாலத்திலிருந்து ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் பாலம் ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கடத்தவிருந்த சட்டவிரோதமான ஒரு தொகை மாட்டிறைச்சியுடன்அதனை கடத்தி வந்த நபரை அனலைதீவில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் யாழ் – மாதகல் பகுதியைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் அவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்