கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு?

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் கல்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான மருந்துகள் சுமார் 2 மாதங்களுக்கு போதுமானதாக உள்ளதாக சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு தெரிவித்தார்.

இதேவேளை, மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில், பிரதிவாதி தரப்பு, சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், எந்தவொரு அதிகாரியும் கலந்துகொள்ளவில்லை.

இது தொடர்பான முறைப்பாடுகள் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியவற்றினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

புகார்களை விசாரிக்க அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்டு, புகார் அளித்த தரப்பினர் மட்டுமே சமூகமளித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்