மரக்கறிகள் பழங்களின் விலையில் வீழ்ச்சி

கடந்த வார இறுதியில் மரக்கறி விலையில் மேலும் சரிவு காணப்பட்டதாக விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக அளவில் இருந்த அவரைக்காய் விலை, வார இறுதியில் ரூ.250 க்கும் குறைவாக விற்கப்பட்டது

பல பொருளாதார மையங்களில் கரட்டின் மொத்த விலை 120 ரூபாய்க்கும் குறைவாக காணப்பட்டது

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சுமார் 120 ரூபாவாகவும், வெலிமடை உள்ளூர் உருளைக்கிழங்கு 200 முதல் 210 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை 95 முதல் 100 ரூபா வரை காணப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் புளிப்பு வாழைப்பழம் 140 ரூபா தொடக்கம் 200 ரூபா வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஒரு கிலோகிராம் கோலிக்கூடு வாழைப்பழம் 400 ரூபாயை நெருங்கியது.

பப்பாளி 220 முதல் 320 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.