மூவர் கஞ்சாவுடன் கைது

மூவர் கஞ்சாவுடன் கைது

கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மூவர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா போதைப்பொருளை கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் சந்தியில், பொது வெளியில் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி மற்றும் ஜோகபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்