வர்த்தகர் வாகனத்திற்குள் சுட்டுக்கொலை

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சொகுசு வாகனத்தில் வைத்து நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காலை 08.00 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்திற்குள் உயிரிழந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Update 

இந்நிலையில் தற்போது சுட்டுக்கொல்லப்பட்ட நபர் வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை காலி வீதியில் இருந்து கடற்கரை வீதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர், அதேவேளை பாதிக்கப்பட்டவர் சாரதி இருக்கையில் இருந்தபோது வாகனத்திற்குள் இறந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் கடவத்தை, கிரல்லாவல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தனது வீட்டிற்குச் சென்றிருந்த போதே குறித்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பிடிக்க பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.