புதிய அலை கலை வட்டத்தின் “வீரவனிதையர்” விருது விழா

புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் வீரவனிதையர் விருது விழா சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வாக கடந்த சனியன்று கொழும்பில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கெளரவ திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பிரபல தொழில் அதிபர் பி.எஸ்.செல்வரட்ணம் முன்னிலை வகிக்க, தமிழகத்தில் இருந்து இந் நிகழ்வுக்காக வருகை தந்த கவிஞர் தங்கம் மூர்த்தி, தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் செந்தில்வேலவர், காயத்ரி விக்கிரமசிங்க, எம்.யோகராஜா மற்றும் ஆர். வைத்தியமாநிதி டாக்டர் கனகலட்சுமி ஆகியோர் சிறப்பு அதிகளாக கலந்து கொண்டனர்.

20 பெண்களுக்கு வீரவனிதையர் விருது வழங்கி கெளரவம் வழங்கப்பட்டது.

இளங்கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக இடம் பெற்றன.