புதிய பெறுமதி சேர் வரியால் கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிப்பு? பாடசாலை பொருட்களின் விலையிலும் மாற்றம்?

புதிய பெறுமதி சேர் வரி (VAT) 18சதவீதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர், அனைத்து கையடக்கத் தொலைபேசிகள், துணைப் பொருட்கள் மற்றும் நிலையான பொருட்களின் சில்லறை விலைகள் அதிகரிக்கும் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (All Ceylon Communication Owners’ Association (ACCOA) இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்படவுள்ள விலைகளை தீர்மானிக்க முடியாது என இதன் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு சிறிய அளவிலான கையடக்க விற்பனையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை நேரடியாகப் பாதிக்கும். எங்கள் நுகர்வோர் தொலைபேசிகள் அல்லது பாகங்கள் எதையும் வாங்க முடியாது.

கையடக்க தொலைபேசிகள் இன்றியமையாத மற்றும் முக்கிய சாதனங்களாக மாறிவிட்டன, மேலும் சார்ஜர்கள், பின் கவர்கள் போன்ற பொதுவான பாகங்கள் , டிஸ்ப்ளேக்கள், கேபிள்கள், திரைப் பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் பிற மின்னணுப் பாகங்கள் ஆகியவை சாதனங்களைப் பராமரிப்பதில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

இப்போது யாரும் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது” என்று பெரேரா தெரிவித்துள்ள நிலையில் ,எனவே கையடக்கத் தொலைபேசிகளுக்கு வட் வரி திக்கப்படக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து பாடசாலைப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்றும், இது அடுத்ததாக பாடசாலை மாணவர்களை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.