சுவிட்சர்லாந்தில் பொது தொலைபேசி சாவடிகளில் புதிய நடைமுறை?

சுவிட்சர்லாந்தில் இருக்கும் பொது தொலைபேசி சாவடிகளில் சுவிஸ் அழைப்புகள் இலவசம் என தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில் 3500 க்கும் அதிகமான பொது தொலைபேசி சாவடிகள் இருந்தன ஆனால் இப்போது 89 பொது தொலைபேசி சாவடிகள் தான் இருக்கின்றன எனவும் அவற்றில் பெரும்பாலானவை சூரிச் மாகாணத்தில் தான் இருக்கின்றன எனவும் சொல்லப்படுகின்றது.

இந்த பொது தொலைபேசி சாவடிகள் தற்போது டெலிகேப்2000 என்ற பெயரில் இயங்கும் ஒரு புதிய நிறுவனத்திற்குச் சொந்தமானவை.

எனினும் எந்தவிதமான சுவிஸ் அழைப்புகளும் அவற்றில் இலவசம் என அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

இதேவேளை சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் பொது தொலைபேசி சாவடி எதுவுமில்லை.

எனினும் மக்கள் அவற்றை சூரிச் (Zurich), பஸெல் (Basel), பியெல் (Biel), Aarau மற்றும் சாங்க்ட் கலன் (Sankt Gallen) ஆகிய இடங்களில் பொது தொலைபேசி சாவடிகளை கண்டால் அவற்றைப் பயன்படுத்தி இலவச சுவிஸ் அழைப்பை மேற்கொள்ளலாம் என டெலிகேப்2000 நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்