புதிய பேருந்து கட்டணங்கள் விபரம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் அறவிடப்படும் பேருந்து கட்டணத்தை நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 10 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, மாகும்புர – காலி இடையிலான புதிய பேருந்து கட்டணம் 930 ரூபாவாகவும், மாகும்புர – மாத்தறைக்கு இடையிலான புதிய பேருந்து கட்டணம் 1170 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடுவலை – மாத்தறைக்கு இடையிலான புதிய சொகுசு பேருந்து கட்டணம் 1260 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு – கதிர்காமம் இடையிலான புதிய பேருந்து கட்டணம் 2270 ரூபா என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையில் புதிய பேருநது கட்டணம் 1300 ரூபாவாகும்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க