கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் புதிய பதில் நிர்வாக உத்தியோகத்தர் நியமனம்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய ஏ.முகம்மட் ஆரிப், 35 ஆண்டுகள் சிறப்பாக அரச சேவையில் பணியாற்றி கடந்த பிப்ரவரி மாதத்தில் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த பதவிக்கு பதில் நிர்வாக உத்தியோகத்தராக அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வகுப்பு – 1 ஐ சேர்ந்த சிரேஷ்ட உத்தியோகத்தரான திரு.கே.ரவீந்திரன் பதில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான பதில் நியமனக் கடிதத்தை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், கணக்காளர் ரீ.லிங்கேஸ்வரன் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச். றியாஸா, என். வரணியா, ஏ.சஞ்சீவன், எம்.எல்.எம். முத்தரீஸ் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நியமனம், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேலும் சீர்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது