
நேபாளத்தின் மிக இளவயது பிரதமர் இன்று பதவியேற்றார்!
நேபாளத்தின் புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞரும், முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா (35 வயது), நேபாளத்தின் மிக இளவயது பிரதமராக இன்று பதவியேற்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சமூக ஊடகத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக நேபாள இளைஞர்கள் (Gen-Z) முன்னெடுத்த மாபெரும் போராட்டத்தினால் அப்போதிருந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத்தேர்தலில், பாலேந்திர ஷா தலைமையிலான கட்சி 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
நேபாளத்தின் ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல் முன்னிலையில், இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12:34 மணியளவில் காத்மண்டுவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்பாலேந்திர ஷா பிரதமராகப் பதவியேற்றார்.
நேபாளத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படும் இந்த புதிய அரசு, ஊழலற்ற நிர்வாகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டை முன்னிறுத்தி தனது பணிகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
