பெலவத்தை நெலுவ வீதி தாழிறங்கும் அபாயம்
சீரற்ற வானிலை காரணமாக வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் பெலவத்தை நெலுவ வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெலவத்த நெலுவ வீதியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகப் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்