மாணவியொருவர் குளிப்பதை மறைந்து இருந்து வீடியோ எடுத்த பக்கத்துவீட்டு இளைஞன்
யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் குளிக்கும் போது மறைந்திருந்து தொலைபேசியில் வீடியோ எடுத்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி வீடொன்றில் மாணவி ஒருவர் குளிக்கும் போது, குளியல் அறை, மேல் ஜன்னல் வழியாக கையடக்க தொலைபேசி ஒன்றினை கண்ட மாணவி சத்தமிட்டுள்ளார்.
மாணவியின் சத்தத்தினைக் கேட்ட பெற்றோர் அவ்விடத்திற்கு சென்ற போது, யாரும் அங்கு இருக்கவில்லை.
வீட்டின் பின்புறம் வெளி நபர்கள் வருவதற்கான சாத்தியம் காணப்படாததால் , அயல் வீட்டு இளைஞன் மீது மாணவியின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, அயல் வீட்டு இளைஞனிடம் வாக்கு மூலம் பெற சென்ற நிலையில், இளைஞன் தலைமறைவான விடயம் பொலிஸாருக்கு தெரியவந்தது.
இந்நிலையில் பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்