வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் வேகம் ஜனவரி மாதத்தில் குறைந்துள்ளது!

இலங்கையின் முதன்மை பணவீக்க விகிதமானது கடந்த ஜனவரி மாதத்தில் 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இந்தப் பணவீக்கமானது, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2.9 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், தற்போது 0.5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.

குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைக் குறிக்கும் உணவுப் பணவீக்கமானது டிசம்பர் மாதத்தில் காணப்பட்ட 4.4 சதவீதத்திலிருந்து ஜனவரி மாதத்தில் 3.4 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

அதேவேளை, உணவு அல்லாத வகைப்பாட்டிலான பணவீக்கமானது எவ்வித மாற்றமுமின்றி 1.6 சதவீதத்திலேயே நீடிக்கின்றது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் வேகம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தில் ஓரளவுக்குக் குறைந்துள்ளது.