மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு

மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

மட்டக்களப்பில் அமைந்துள்ள விமான நிலயத்திற்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைத்து குறித்த கஞ்சி காய்ச்ச முற்பட்ட வேளை சுகாதார ஊழியர்கள் முக கவசங்களை அணியுமாறு அறிவுறித்தியிருந்ததாக கூறப்படுகின்றது. அதனையடுத்து குறித்த கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வை தமிழரசு கட்சி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், பாதிரியார் ஜோசப் மேரி, சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமார் காணாமல் ஆக்கப்பட்டபோர் சங்க தலைவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை குறித்த பகுதிகளில் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.